“இப்ப காமிச்சாங்களே,
அதென்னது? உம்....வெஜிடபிள் ரோல், ரொம்ப நல்லா இருந்திச்சு இல்லே, சுசீலா?”
“ஆமா, இவளோட ஷோல
எல்லா ரெசிபியும் எப்பவும் நல்லா இருக்கும். நீங்க இன்னிக்கு தான் பாக்கறீங்க. எனக்கு
இவளோட ஷோ ரொம்ப பிடிக்கும்.”
“கடைசில அந்த வெஜிடபிள்
ரோலோட டிஸ்ப்ளே! ஆ! பார்க்கறச்சேயே நாக்குல தண்ணி ஊறுது. சாப்பிட்டா எவ்வளவு டேஸ்டியா
இருக்கும்! சுசீலா, உனக்கு உப்புமா, தோசை தான் பண்ணத்தெரியும். இதெல்லாம் தெரியாது”
“ஏன் தெரியாது?
எனக்கு இந்த எல்லா ரெசிபியும் பண்ணத்தெரியும்.”
“பின்ன ஏன் பண்ண
மாட்டேங்கறே?”
“என்ன பண்ண மாட்டேங்கறேன்?”
“அதான் இந்த ....
வெஜிடபிள் ரோல்”
“ஓ! வெஜிடபிள்
ரோலா? பண்ணனுமா?”
“ஆமா, எனக்கு ரொம்ப
ரொம்ப பிடிக்கும். இன்னிக்கு டின்னருக்கு பண்றயா? குழந்தைங்க சசியும், கேசவ்வும் ட்யூஷன்
முடிஞ்சு வரச்சே த்ரில் ஆயிடுவாங்க”
“சரி. பண்ணினாப்போச்சு.
ஆனா ஒரு கண்டிஷன்.”
“கண்டிஷனா? என்ன?”
“எனக்கு நீங்க
ஹெல்ப் பண்ணனும்.”
“இவ்வளவு தானே?
நீ எனக்காக வெஜ் ரோல்ஸ் பண்ணப்போறே. நான் ஒனக்கு ஹெல்ப் பண்ண மாட்டேனா? என்ன ஹெல்ப்
வேணும், சொல்லு.”
“வெஜ் ரோல்ஸ் பண்றதுக்கு
வேண்டிய சாமான் லிஸ்ட் போட்டு தரேன். சூப்பர் மார்கட்டுக்குப்போய் எல்லாத்தையும் வாங்கிட்டு
வரணும்.”
“இவ்வளவு தானே?”
“இருங்க, இன்னும்
இருக்கு. வாங்கினப்புறம் எல்லா காயையும் நல்லா கழுவி பொடிப்பொடியா நறுக்கித் தரணும்.
மூணு பெரிய வெங்காயம், இஞ்சி, மல்லித்தழை எல்லாம் பொடியா அரிஞ்சு தரணும். அப்பறம்...
சட்னிக்கு அரை மூடி தேங்காய் திருவித் தரணும்.”
“எல்லாம் நான்
பண்ணிட்டா அப்புறம் நீ என்ன பண்ணுவே?”
“நானா? நான் முதல்ல
சப்பாத்தி மாவு பிசைவேன். கொறஞ்சது இருவது சப்பாத்தியாவது வேண்டியிருக்கும். மசாலா சாமான்கள வறுத்து பொடி பண்ணனும். அப்புறம் வெங்காயத்த
நல்லா வதக்கிட்டு, அப்புறம் எல்லா காய்களையும்
போட்டு வதக்கி ஸ்பைசஸ் சேர்த்து ஃபில்லிங்க் ரெடி பண்ணிட்டு, இப்ப டிவில பாத்தீங்களே,
அது மாதிரி வெஜிடபிள் ரோல்ஸ ரெடி பண்ணி ஃப்ரை பண்ணுவேன். அப்புறம் சட்னி பண்ணனும் அப்பறம்.
சொல்ல மறந்துட்டேனே, நாம எல்லாம் சாப்டப்புறம் கிச்சன நான் க்ளீன் பண்ணீடறேன். நீங்க சாப்ட
ப்ளேட்டை எல்லாம் சிங்க்ல போட்டுட்டு டைனிங்க் டேபிள மாத்திரம் க்ளியர் பண்ணி சுத்தமா
தொடச்சிட்டீங்கன்னா போதும்.”
“நான் பிஸ்ஸா ஆர்டர்
பண்ணிடறேன்.”
.