Friday, August 31, 2018

வக்கீலின் சாமர்த்தியம்

ஐயா! ஐயா!”
பேப்பரில் மூழ்கியிருந்த ராமசாமி நிமிர்ந்து பார்த்தார்.
எதிரில் மூச்சு வாங்க, கண்களில் திகில் மின்ன நின்ற மணி என்கிற மணிகண்டனைக் கண்ட ராமசாமி புருவங்களை உயர்த்தினார். மணிகண்டன் வேலைக்காரி மாரியம்மாவின் மகன்.
“ஐயா! சீக்கிரம் வாங்க! பாபு அண்ணன் தற்கொல பண்ணிக்க போறாரு”
“என்னடா ஒளர்றே?”
“நெசமாத் தான் ஐயா.. சீக்கிரம் வாங்க. அண்ணன் ரூம்ல கதவ  பூட்டிகிட்டாரு. பரிட்சைல ஃபெயிலாயிட்டாரில்லே, அதான். தற்கொல பண்ணிக்கப் போறாரு. பெரியம்மா அழறாங்க, உங்கள கையோட கூட்டிட்டு வர சொன்னாங்க”
“சரி, நீ போ. நான் அம்மா கிட்ட சொல்லிட்டு வரேன்.”
ராமசாமி உள்ளே சென்று மனைவியிடம் சிறிது பேசிவிட்டு பக்கத்து வீடான தன் அக்காவின் வீட்டிற்கு விரைந்தார்.  மாடியிலிருந்து கூக்குரல் பலமாகக் .கேட்டது. மாடிக்கு வேகமாக ஏறிப்போனார் ராமசாமி. அங்கே கதவு சாத்தியிருந்த ஒரு அறைக்கு வெளியில் மூன்று நான்கு பெண்மணிகளும் ஓரிரு சிறுவர்களும் கூடியிருந்தனர். பெண்கள் பெரிதாக கூச்சலிட்டு அழுது கொண்டிருந்தார்கள்.
“பாபு. தெறாடா. கதவ தெற! கதவத் தெற!” எல்லாரும் அலறிக் கொண்டிருந்தார்கள்.
ராமசாமியைக் கண்டதும் அவருடைய அக்கா ஓடி வந்தாள்.
“ராமு, ராமு! வந்துட்டியாடா? உள்ள ரூம்ல பாபு பூட்டிண்டிருக்காண்டா. ஒரே பயமா இருக்கு. தூக்கு போட்டுக்கப்போறேன்னு பயமுறுத்தறான். ஒரு சப்ஜக்ட்ல ஃபெயில்னு ரிசல்ட் வந்துது. இன்னிக்கு கார்த்தால. ஓடிப்போய் ரூம்ல கதவ சாத்தி தாப்பா போட்டுண்டுட்டான். என்ன செய்யறதுன்னே தெரியல்ல, ராமு! ரொம்ப பயமா இருக்கு. ஏதாவது பண்ணுடா! கதவ தெறக்க பண்ணு! எதாவது ஏடாகூடமா பண்ணிடப் போறான்!”
அறையின் உள்ளிருந்து கட்டிலை இழுக்கும் சத்தம் கேட்டது.
“அய்யய்யோ! கட்டில இழுக்கறானே!”
“அய்யய்யோ!”  பெண்களின் ஓலம் வலுத்தது.
“கொஞ்சம் எல்லோரும் அமைதியா இருங்கோ” என்று ராமசாமி கையை உயர்த்தி சைகை காட்டினார்.
உடனே எல்லாரும் கத்துவதை நிறுத்தினார்கள்.
ராமசாமி உரத்த குரலில் பேசத் தொடங்கினார்.
“செல்லம், எனக்கு பாபுவோட மனசு புரியறது. அவன் எடத்துல நான் இருந்தா நானும் இப்படி தான் செய்வேன்.”
“ஐயோ, ராமு, என்னடா சொல்றே?”
“ஆமாம், செல்லம் ஃபெயிலான எப்படி அவமானமா இருக்கும்னு எனக்கு நன்னாவே தெரியும்”
“ஐயோ, ராமு, என்ன இப்படி  சொல்றே?
பெண்கள் அவரை கலக்கத்துடன் நோக்கினார்கள்.
அறையின் உள்ளே கட்டில் இழுக்கும் சத்தம் நின்றது.
“ஆமா, செல்லம். வருஷம் முழுக்க கஷ்டப்பட்டு படிச்சப்புறம் பாழாப்போன ரிசல்ட் ஃபெயில்னு வந்தா எப்படி ஃபீலிங்க் இருக்கும்னு எனக்கு நன்னா தெரியும்.ஏன்னா எனக்கும் அப்படி ஆயிருக்கு. செல்லம், ஒனக்கு ஞாபகம் இருக்கா? நான் லா காலேஜ்ல படிக்கறச்சே மொதல் வருஷம் ஃபெயிலாயிட்டேனே?”
“ஆமாண்டா, ஞாபகம் இருக்கு”
“அப்போ பாபு மாதிரி தான் நானும் ஃபீல் பண்ணினேன்.”
அறையின் உள்ளே அமைதி!
“ஆனா ராமு, நீ தற்கொல பண்ணிக்கலையே!”
“ஒனக்கு தெரியாது, நானும் கயிறு வாங்கி ரூம்ல தாப்பா போட்டுண்டேன் சூய்சைட் பண்ணிக்க.”
“அப்படி  ஒண்ணும்…..” எதோ சொல்லப்போன செல்லத்தை பேசாமல் இருக்கும்படி சைகை செய்தார் ராமசாமி.
“ஆமாம், செல்லம்,  செத்துப்போணும்னு நெனச்சேன். தாங்க முடியாத அவமானமா இருந்துது. ஆனா என் மாமா எப்படியோ என்னை தடுத்துட்டார். பாபு, கேக்கறதா? நான் உன் சைட்ல தான் இருக்கேன். எங்களப்பத்தி நீ கவலப்படாதே. உன் ப்ளான் என்னவோ அத செய். என்ன? உன் அம்மா, அதான் என் அக்கா, கொஞ்சம் மனசு ஒடைஞ்சு போவா. உன் அப்பாவோட ப்ரஷர் ஷூட் அப் ஆகும். பாவம், அத்திம்பேர், அவர் டெல்லி போயிருக்கார். அவருக்கு ஒண்ணும் தெரியாது. அதெல்லாம் பத்தி நீ கவலப்படாதே. உன் இஷ்டப்படி செய். ஆமா, செல்லம் நீ சாப்பிட்டயா?”
“எப்படிடா சாப்பிடுவேன்? இவன் இப்படி பண்றானே?” செல்லம் விம்மியவாறே சொன்னாள்.
“இல்லே, செல்லம், நீ சாப்பிடணும், இல்லேன்னா ஒனக்கு மயக்கம் வந்துடும்.”
“அவன் போயிட்டான்னா  நான் உசுரோட இருக்கணுமா, சொல்லு!”
அறையின் உள்ளே நிசப்தம்.
ராமசாமி உரத்த குரலில் பேசினார்.
“பாபு, நான் தூக்கு போட்டுக்க போன போது என் மாமா என்ன சொன்னார் தெரியுமா? என்னை கோழைன்னு சொன்னார். இங்க நான் தூக்குப் போட்டுக்க ரெடியா இருக்கேன். தூக்கு கயிறு மென்னிய கொஞ்சம் கொஞ்சமா இறுக்கும். மூச்சு முட்டும்.  எத்தன வலிக்கும் ? மரணவேதனைல துடிக்கணும்! அதை எல்லாம் பொருள் படுத்தாம நான் தைரியமா தற்கொல பண்ணிக்க போயிண்டிருக்கேன்! இங்க மாமா என்னடான்னா என்னை பயந்தாங்குள்ளிங்கறார்.”
ராமசாமி கொஞ்சம் நிறுத்தினார். எல்லோரும் அவரையே பார்த்துக்கொண்டிருந்தார்கள்.
ராமசாமி தொடர்ந்தார்.
“ ஏன் என்னை கோழைன்னு சொல்றே மாமான்னு கேட்டேன். அதுக்கு அவர் என்ன சொன்னார் தெரியுமா? ஒனக்கு தைரியம் இல்ல ஒலகத்த ஃபேஸ் பண்ண. ஒனக்கு தைரியம் இல்ல ஃபேமலிய  ஃபேஸ் பண்ண. ஒனக்கு தைரியம் இல்ல நண்பர்கள ஃபேஸ் பண்ணன்னு என்னை கிண்டல் பண்ணினார். ஏன் பாபு, உனக்கு ஒலகத்த ஃபேஸ் பண்ண பயமா?”
“அங்கிள்! என்னால இந்த அவமானத்த தாங்க முடியல்ல. நான் செத்துபோறேன். என்னை விடுங்க!”
பாபுவின் குரலைக்கேட்டதும் பெண்கள் பெரிதாக கத்தி புலம்ப ஆரம்பித்தார்கள்.
 அமைதியா இருக்கும்படி மீண்டும் ராமசாமி கையை உயர்த்தி சைகை காட்டினார்.
“ஆமா. அவமானம். கரக்டு தான். ஆனா நான் ஃபெயில் ஆன அவமானத்த இப்ப நான் ஃபீல் பண்ணல. நான் ஃபெயில் ஆன நெனவு இப்போ என் மனசுல மங்கிடுத்து. இப்போ நான் வாழ்க்கைய நன்னா எஞ்சாய் பண்றேன்.”
“இல்ல, மாமா என்னால மறக்கமுடியாது.”
“பாபு, நீ மறப்பே. இப்போ அது மலை போல பெருசா தெரியறது. கொஞ்சம் நாளானதும் அவ்வளவு பெருசா தெரியாது. இங்க்லிஷ்ல சொல்வா டயம் ஈஸ் தி பெஸ்ட் ஹீலர்னு. இந்த பாழாப்போற பரிட்சைய விட வாழ்க்கைல எவ்வளவோ இருக்கு. அடுத்த வாட்டி நீ இந்த சப்ஜக்டையும் சேர்த்து பாஸ் பண்ணலாம். நான் அப்படித்தான் பண்ணினேன். நீ சின்னவன், பாபு. உன் முழு வாழ்க்கையும் உன் முன்னால இருக்கு. வெளில வா, பாபு. உன் அம்மா எத்தன கவலைல இருக்கான்னு பாரு. அவளுக்கு ஆறுதல் சொல்லு. வாப்பா!”
ஓரு முழு நிமிஷம் வரை நிசப்தம். பிறகு தாழ்ப்பாள் திறக்கும் ஓசை. ஆஹா! அதை விட இனிமையான ஒலி இருக்க முடியுமா அந்த பேதை தாய்க்கு?
பாபு பெரிதாக அழுது கொண்டே தன் தாயின் விரிந்த கரங்களில் விழுந்தான். எல்லாருக்கும் ஒரே மகிழ்ச்சி.
“இதோ தங்கம் வரா”  என்றார் ராமசாமி.
“தங்கம், என்ன ஆச்சு தெரியுமா?” செல்லம் அவளிடம் ஓடினாள்.
“அதெல்லாம் இருக்கட்டும், செல்லம். அப்பறம் பேசலாம். அதென்ன தங்கம், உன் கைல?” என்றார் ராமசாமி.
“காஃபி பிஸ்கட். எல்லாருக்கும் கொண்டு வந்திருக்கேன்.”
“தங்கம், சரியா கொண்டு வந்திருக்கே, எல்லாருக்கும் பசி. டயர்ட். குடு ” என்றார் அட்வகேட்  ராமசாமி.
எல்லாரும் காஃபியும் பிஸ்கட்டையும் ஒரு கை பார்த்தார்கள்.
“தங்கம், உனக்கு எப்படி தெரிஞ்சுது? சரியா வந்தே?” என்று கேட்டாள் செல்லம் ரகசியமாக.
“அவர் எங்கிட்ட அரை மணி நேரம் கழிச்சு காபி போட்டு எடுத்துண்டு வான்னு சொன்னார்.”

ஐயா! ஐயா!”
பேப்பரில் மூழ்கியிருந்த ராமசாமி நிமிர்ந்து பார்த்தார்.
எதிரில் மூச்சு வாங்க, கண்களில் திகில் மின்ன நின்ற மணி என்கிற மணிகண்டனைக் கண்ட ராமசாமி புருவங்களை உயர்த்தினார். மணிகண்டன் வேலைக்காரி மாரியம்மாவின் மகன்.
“ஐயா! சீக்கிரம் வாங்க! பாபு அண்ணன் தற்கொல பண்ணிக்க போறாரு”
“என்னடா ஒளர்றே?”
“நெசமாத் தான் ஐயா.. சீக்கிரம் வாங்க. அண்ணன் ரூம்ல கதவ  பூட்டிகிட்டாரு. பரிட்சைல ஃபெயிலாயிட்டாரில்லே, அதான். தற்கொல பண்ணிக்கப் போறாரு. பெரியம்மா அழறாங்க, உங்கள கையோட கூட்டிட்டு வர சொன்னாங்க”
“சரி, நீ போ. நான் அம்மா கிட்ட சொல்லிட்டு வரேன்.”
ராமசாமி உள்ளே சென்று மனைவியிடம் சிறிது பேசிவிட்டு பக்கத்து வீடான தன் அக்காவின் வீட்டிற்கு விரைந்தார்.  மாடியிலிருந்து கூக்குரல் பலமாகக் .கேட்டது. மாடிக்கு வேகமாக ஏறிப்போனார் ராமசாமி. அங்கே கதவு சாத்தியிருந்த ஒரு அறைக்கு வெளியில் மூன்று நான்கு பெண்மணிகளும் ஓரிரு சிறுவர்களும் கூடியிருந்தனர். பெண்கள் பெரிதாக கூச்சலிட்டு அழுது கொண்டிருந்தார்கள்.
“பாபு. தெறாடா. கதவ தெற! கதவத் தெற!” எல்லாரும் அலறிக் கொண்டிருந்தார்கள்.
ராமசாமியைக் கண்டதும் அவருடைய அக்கா ஓடி வந்தாள்.
“ராமு, ராமு! வந்துட்டியாடா? உள்ள ரூம்ல பாபு பூட்டிண்டிருக்காண்டா. ஒரே பயமா இருக்கு. தூக்கு போட்டுக்கப்போறேன்னு பயமுறுத்தறான். ஒரு சப்ஜக்ட்ல ஃபெயில்னு ரிசல்ட் வந்துது. இன்னிக்கு கார்த்தால. ஓடிப்போய் ரூம்ல கதவ சாத்தி தாப்பா போட்டுண்டுட்டான். என்ன செய்யறதுன்னே தெரியல்ல, ராமு! ரொம்ப பயமா இருக்கு. ஏதாவது பண்ணுடா! கதவ தெறக்க பண்ணு! எதாவது ஏடாகூடமா பண்ணிடப் போறான்!””
அறையின் உள்ளிருந்து கட்டிலை இழுக்கும் சத்தம் கேட்டது.
“அய்யய்யோ! கட்டில இழுக்கறானே!”
“அய்யய்யோ!”  பெண்களின் ஓலம் வலுத்தது.
“கொஞ்சம் எல்லோரும் அமைதியா இருங்கோ” என்று ராமசாமி கையை உயர்த்தி சைகை காட்டினார்.
உடனே எல்லாரும் கத்துவதை நிறுத்தினார்கள்.
ராமசாமி உரத்த குரலில் பேசத் தொடங்கினார்.
“செல்லம், எனக்கு பாபுவோட மனசு புரியறது. அவன் எடத்துல நான் இருந்தா நானும் இப்படி தான் செய்வேன்.”
“ஐயோ, ராமு, என்னடா சொல்றே?”
“ஆமாம், செல்லம் ஃபெயிலான எப்படி அவமானமா இருக்கும்னு எனக்கு நன்னாவே தெரியும்”
“ஐயோ, ராமு, என்ன இப்படி  சொல்றே?
பெண்கள் அவரை கலக்கத்துடன் நோக்கினார்கள்.
அறையின் உள்ளே கட்டில் இழுக்கும் சத்தம் நின்றது.
“ஆமா, செல்லம். வருஷம் முழுக்க கஷ்டப்பட்டு படிச்சப்புறம் பாழாப்போன ரிசல்ட் ஃபெயில்னு வந்தா எப்படி ஃபீலிங்க் இருக்கும்னு எனக்கு நன்னா தெரியும்.ஏன்னா எனக்கும் அப்படி ஆயிருக்கு. செல்லம், ஒனக்கு ஞாபகம் இருக்கா? நான் லா காலேஜ்ல படிக்கறச்சே மொதல் வருஷம் ஃபெயிலாயிட்டேனே?”
“ஆமாண்டா, ஞாபகம் இருக்கு”
“அப்போ பாபு மாதிரி தான் நானும் ஃபீல் பண்ணினேன்.”
அறையின் உள்ளே அமைதி!
“ஆனா ராமு, நீ தற்கொல பண்ணிக்கலையே!”
“ஒனக்கு தெரியாது, நானும் கயிறு வாங்கி ரூம்ல தாப்பா போட்டுண்டேன் சூய்சைட் பண்ணிக்க.”
“அப்படி  ஒண்ணும்…..” எதோ சொல்லப்போன செல்லத்தை பேசாமல் இருக்கும்படி சைகை செய்தார் ராமசாமி.
“ஆமாம், செல்லம்,  செத்துப்போணும்னு நெனச்சேன். தாங்க முடியாத அவமானமா இருந்துது. ஆனா என் மாமா எப்படியோ என்னை தடுத்துட்டார். பாபு, கேக்கறதா? நான் உன் சைட்ல தான் இருக்கேன். எங்களப்பத்தி நீ கவலப்படாதே. உன் ப்ளான் என்னவோ அத செய். என்ன? உன் அம்மா, அதான் என் அக்கா கொஞ்சம் மனசு ஒடைஞ்சு போவா. உன் அப்பாவோட ப்ரஷர் ஷூட் அப் ஆகும். பாவம், அத்திம்பேர், அவர் டெல்லி போயிருக்கார். அவருக்கு ஒண்ணும் தெரியாது. அதெல்லாம் பத்தி நீ கவலப்படாதே. உன் இஷ்டப்படி செய். ஆமா, செல்லம் நீ சாப்பிட்டயா?”

“அவர் எங்கிட்ட அரை மணி நேரம் கழிச்சு காபி போட்டு ஏடுத்துண்டு வான்னு சொன்னார்.”