Sunday, September 19, 2021

அழிக்காதே!

 

அழிக்காதே தம்பி, அழிக்காதே இந்த பூமிதனை, இது 

இயற்கை தந்த பரிசு, அறியாயோ நீ?

 

அண்டம் எங்கும் தேடினார்,

எங்கும் காணவில்லை, உயிரினம் (அழிக்காதே)

 

எத்தனை எத்தனை அழகுகள்!

வண்ணத்து பூச்சிகள், வாசமிகு மலர்கள்

நீல வானம், தென்றல் காற்று, (அழிக்காதே)

 

புசிக்க காய்கறி, சத்தான பச்சைக்கீரை,

பசி தீர்க்க பழங்கள், பருக இனிக்கும் இளநீர் (அழிக்காதே)