Wednesday, March 3, 2021

பேரின்பம்

 

கல்கியின் சிவகாமியின் சபதம் மீண்டும் ஒரு முறை வாசித்தேன்.

அதில் திருநாவுக்கரசர் அருளியதாக கூறப்பட்டுள்ள வரிகள் என்னை 

கவர்ந்தன.

அதை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

 

நாம் துன்பம் என்று நினைப்பது உண்மையில் துன்பம் அல்ல!

இன்பம் என்று கருதுவது உண்மையில் இன்பம் அல்ல.

இன்ப துன்ப உணர்ச்சியானது உலக பாசத்தினால் ஏற்படுகிறது.

இந்த பாசத்தைத் தான் பெரியோர் மாயை என்கிறார்கள்.

மாயை நம்மை விட்டு அகலும்போது

இன்பமும் இல்லை, துன்பமும் இல்லை என்பதை அறிவோம்.

அந்த இறைவனுடைய திருவருளாகிய பேரின்பம் ஒன்றுதான்

மிஞ்சி நிற்கக் காண்போம்.