Friday, August 6, 2021

உன் அம்மா ஓல்ட் ஃபேஷன்ட்!

 

“ஹாய்! சுமி!”

“ஹாய், மனோ!”

“சுமி! நீ இந்த “கெட்டப்”ல சூப்பரா இருக்கே.”

“தேங்க் யூ, மனோ. அது சரி, எதுக்கு இப்போ வரச் சொன்னே? எதோ முக்கியமான விஷயம்னு சொன்னே?”

”ஆமா, இந்த வாரம் மூணு நாள் லீவு வரது. வரயா?  நாம ஜாலியா ஊட்டி போயிட்டு வரலாம். என்ன சொல்றே?”

“அதெல்லாம் முடியாது, மனோ, உன் கிட்ட சொல்லியிருக்கேனே, எங்கம்மா விட மாட்டாங்க.”

“ஆஃபீஸ் டூர்ன்னு சொல்லிட்டு வா. ஜாலியா எஞ்சாய் பண்ணலாம்.”

“பொய்யெல்லாம் சொன்னா அம்மா கண்டுபிடிச்சுடுவா. எங்கம்மா என்ன சொல்லிட்டே இருக்காங்க தெரியுமா, இந்த ஆம்பிளைகள நம்பவேக்கூடாதுன்னு. இப்பவே நீ இன்ஸ்டாக்ராம் வழியா என் நண்பனானதெல்லாம் அம்மா கிட்ட சொல்லாம இருக்கேன். மனோ. அம்மா கிட்ட மறைக்கிறேனேங்கறது என் மனசாட்சிய எப்படி உறுத்துது, தெரியுமா?

“உங்கம்மா “ஓல்ட் ஃபேஷண்ட். அவங்களுக்கு இந்தக் காலத்து பிள்ளங்களப்பத்தி புரியாது. எப்படி எல்லாரும் ஜோடி ஜோடியா ஜாலியா போறாங்க. நீ எப்பப் பார்த்தாலும்  அம்மா அம்மான்னு சொல்லிட்டே இருக்கே. நாம ஒண்ணுமே எஞ்சாய் பண்ண முடியல்ல. கொஞ்சம் நெருங்கினா வெலகிக்கறே.”

“ஏன்னா எங்கம்மா என்னை வளர்க்க எப்படி பாடுபட்டிருக்காங்க தெரியுமா? நான் அம்மாவுக்குத் தெரியாம இப்ப உன்னை சந்திக்க வரதே தப்புன்னு தோணுது.”

“அதெல்லாம் இருக்கட்டும். இப்போ வெள்ளிக்கிழமை கிளம்பறோம். திங்கள் காலைல ரிடர்ன். எப்படியாவது நீ வந்து தான் ஆகணும். நான் எல்லா ஏற்பாடும் செய்யறேன். எதாவது சாக்கு சொல்லாதே. ஒனக்கு என் மேல லவ் இல்லையா? நான் உன்னை எப்படி லவ் பண்றேன் தெரியுமா? நீ ஏன் புரிஞ்சிக்க மாட்டேங்கறே? நீ என்னை லவ் பண்ணலியா? ஒனக்கு என்னை பிடிக்கலையா?”

“பிடிக்காமையா உன்ன வந்து இப்படி திருட்டுத்தனமா “மீட்” பண்றேன்?”

“அப்போ வா.”

“அதுக்கு முன்னாடி  முறையா எங்கம்மாகிட்ட வந்து பொண்ணு கேளு. “

“அதெல்லாம் அப்புறமா செய்யலாம். இப்போ இந்த வாரம் நீ என்னோட வரே.”

“அப்போ ஒண்ணு செய். பெருசா கல்யாணம் இல்லேன்னாலும் நாலு பேர் முன்னால, என் அம்மா, என் தாய்மாமன் என் தரப்புல, உன் அப்பா அம்மா உன் தரப்புல, அவங்க முன்னிலைல என் கழுத்துல தாலியக் கட்டு. அதுக்கு எங்கம்மா சம்மதிப்பா. அப்புறம் நீ இழுக்கற இழுப்புக்கு நான் வந்துக்கிட்டே இருப்பேன்.”

“இங்க இப்பவே உன் கழுத்துல தாலி கட்ட நான் தயார்! இப்ப வா. இந்த அரசமரத்தடி பிள்ளையார் முன்னால உன் கழுத்துல தாலி கட்டறேன்.”

“ஏன் பெரியவங்க முன்னால கட்ட நீ தயங்கறே?”

“அது .. அது..”

“என்ன அது அதுங்கறே?”

“அது முடியாது.”

“ஏன் முடியாது?”

“அது வந்து, .. வந்து… சுமி, எனக்கு ஒரு மனைவி இருக்கா.”

”அட படு பாவி!”

“ஆனா சுமி, அவள நான் நேசிக்கல்ல, உன்னைத் தான் உசுருக்கும் மேலா நேசிக்கறேன். உனக்காக என்ன வேணுமானாலும் செய்வேன்.

“என்ன வேணும்னாலும் செய்வியா?”

“என்ன வேணும்னாலும் செய்யறேன், சொல்லு. என்ன செய்யணும்?”

உன் மனைவியை “டைவோர்ஸ்” பண்ணனும். பண்றியா?”

“டைவோர்ஸா! அது கஷ்டம், சுமி.”

“ஏன்? என்ன கஷ்டம்?”

“ஏன்னா எனக்கு ரெண்டு குழந்தைங்க இருக்குது.”

“அடப்பாவி! ஸ்கௌண்ட்ரல்!, ராஸ்கல்! இப்ப நீ இந்த எடத்த காலி பண்ணல்லேன்னா போலீஸைக் கூப்பிடுவேன். கெட் அவுட்!”

 

 

No comments:

Post a Comment