இது ஒரு குருநாவல்.
ஒவ்வொரு வாரமும் ஒரு அத்தியாயம் போஸ்ட் செய்யலாம் என்று இருக்கிறேன், ஒரு தொடர்
கதை மாதிரி. படித்து உங்கள் கமென்ட்ஸ்களை கொடுங்கள்.
அத்தியாயம்-1
கிருஷ்ணா நகர் கோவைப்
புற நகர் பகுதியில் இருந்த ஒரு ஏழை மக்களின் குடியிருப்பு. அங்கிருந்த குடிசைகள்
பலவிதமான பொருட்களைக் கொண்டு, பலர் வேண்டாம் என்று எறிந்துவிட்ட பொருட்களை எப்படி எப்படியோ இணைத்து உருவாக்கப்
பட்டிருந்தன. அவர்களது நோக்கம் மழை வந்தால் உள்ளே தண்ணீர் ஒழுகக் கூடாது. அவ்வளவு
தான். காலனியின் ஒரு பக்கம் நகரின் கழிவு நீர் கால்வாய் இருந்தது. ஓடிக்
கொண்டிருந்தது என்று சொல்ல முடியாது. பிளாஸ்டிக் பைகளும் அழுக்குத் துணிகளும்
கழிவுநீரின் ஓட்டத்தை தடுத்து நிறுத்தியதால் இரவில் கொசுக்களின் ஆக்ரமிப்பு
பயங்கரமாக இருக்கும்.
வெவ்வேறு அரசியல்
கட்சிகளும் தேர்தல் சமயத்தில் அங்கே வருகை தருவார்கள், வாக்குறுதிகளும்
செய்வார்கள். அந்த புறம்போக்கு இடத்தை தங்களுக்கு பிரித்து கொடுக்கவேண்டும் என்பது
அந்த மக்களின் நெடுநாள் வேண்டுகோள். ஆனால் அவர்கள் நிலைமையில் ஒரு மாற்றமும்
இல்லை.
நம் கதையின் முக்கிய
பாத்திரங்களான வள்ளியும் முருகேசனும் அங்கே ஒரு குடிசையில் வாழ்ந்தார்கள். சேரியில்
வாழ்ந்த அந்த ஏழை மக்களுக்கும், “ஏழைக்கேத்த எள்ளுருண்டை” என்பது போல அவரவருக்கு
தகுந்தவாறு ஆசைகளும் கனவுகளும் இருந்தன. வள்ளியின் குடிசைக்கு பக்கத்து குடிசையில்
இருந்த ராமக்காளுக்கு தன் வாழ்நாளுக்குள் எப்படியாவது இரண்டு பவுனில் ஒரு சங்கிலி
வாங்கி போட்டுக்கொள்ள வேண்டும் என்று ஆசை. மோட்டார் பழுது பார்க்கும் கம்பெனியில் வேலை
பார்த்த முனுசாமிக்கு ஒரு “பைக்” குக்கு சொந்தக்காரனாக வேண்டும் என்று தணியாத ஆசை.
இப்படி எத்தனை எத்தனையோ ஆசைகள், கனவுகள். ஒருத்திக்கு ஜரிகை பார்டருடன் பட்டுப்
புடவை என்றால் ஒருவரின் லட்சியம் நல்ல மொபைல் ஃபோன், இன்னொருவருக்கு படுக்க நல்ல
கட்டில். வள்ளிக்கோ இவைகளில்
எல்லாம் நாட்டமில்லை. அவளுடைய ஒரே லட்சியம் தன் மகன் செல்வனை படிக்க வைத்து பெரிய
மனிதனாக்க வேண்டும் என்பதே.
வள்ளி இரண்டு மூன்று
வீடுகளில் பாத்திரம் விளக்கி, வீடு கூட்டித் துடைத்து, துணி துவைத்து உழைத்தாள்.
முருகேசன் ஒரு பணக்காரர் வீட்டில் மாடுகளை பராமரித்து, தோட்டவேலை செய்தான். இருவரும்
சம்பாதித்தது அவர்களுடைய அடிப்படை தேவைகளுக்கு போதுமானதாக இருந்தது. வள்ளி
கெட்டிக்காரி, புத்திசாலி. முருகேசன் சற்று சபல புத்தியுள்ளவன். கையில்
காசிருந்தால் சினிமா பார்ப்பான், பலகாரக் கடையில் வாங்கி சாப்பிடுவான்,
சீட்டாட்டத்திலும் நாட்டமுண்டு. ஆனால் வள்ளிக்கு அடங்கியவன். கடன் வாங்கக் கூடாது
என்பது வள்ளியின் உறுதியான கொள்கை. வள்ளியின் கண்டிப்பான நிர்வாகத்தினால் அந்த
குடும்பவண்டி ஓரளவு சுமாராக ஓடியது.
அன்று காலை வள்ளி வழக்கம்
போல் வேலைக்கு கிளம்பினாள்.
“செல்வா, நல்லா
படிச்சிட்டு இஸ்கோலுக்கு போ! நேத்து மாதிரி சுத்தினே தோலு களண்டுடும்” என்று மகனை
எச்சரித்துவிட்டு போனாள்.
முதலில் வக்கீல் வீடு.
எஜமானி காவேரியம்மாளுக்கு எச்சிற்கையால் காக்கை விரட்ட மனசாகாத சுபாவம். “ஸிங்க்”
நிறைய பாத்திரங்கள். வீடு கூட்டி துடைக்க வேண்டும். துவைக்க பிலாஸ்டிக் “டப்”
நிறைய துணி. வேலை செய்யும்போது கழுகு கண்ணால் பார்த்துக் கொண்டிருப்பாள். “கட்டிலுக்கு
அடியில் நல்லா கூட்டு, துணிகளை நல்லா விரிச்சு அலசு” என்று ஏதாவது சொல்லிக் கொண்டே
இருப்பாள். இன்றும் அப்படித் தான்.
காவேரி கழுநீர் மாதிரி
பழுப்புநிற திரவம் ஒன்றை காபி என்ற பெயரில் “இந்தா, குடி” என்று வள்ளிக்கு
முன்னால் வைத்தாள். வள்ளிக்கு கோபம் வந்துவிட்டது.
“இந்த கழுநீரை
மாட்டுக்கு ஊத்துங்க. இதை யார் குடிப்பாங்க?” என்று கத்தினாள்.
“ஆனாலும் ஒனக்கு வாய் ஜாஸ்தி!
இந்த காபிக்கு என்ன கொறைச்சல்?”
“ஆமாம், எனக்கு வாய்
சாஸ்தி தான். வாயில்லாத நல்ல ஆளா பாத்துக்குங்க!” வள்ளி பாத்திரங்களை அப்படியே
போட்டுவிட்டு வெளியே நடந்தாள்.
“இந்த அம்மா வீட்ல யாராலயும் வேல செய்ய முடியாது. செம வேல வாங்கும், சம்பளம் கேட்டா இலேசுல குடுக்காது. அபார்டுமண்டுல நெறய குடி வந்திருக்காங்க. ஏதாவது வீடு கெடைக்காம போகாது. மொதல்லியே கண்டிசனா சம்பளம் கேட்டுபோடணும். செல்வன் படிச்சு நல்ல வேலைக்கு வந்தா பின்னே யாரையும் லட்சியம் செய்யவேண்டாம். தல நிமிர்ந்து நடக்கலாம்” என்று மனக்கோட்டை கட்டியவாறு தான் வேலை செய்யும் இரண்டாம் வீட்டிற்கு நடந்தாள்.
“இந்த அம்மா வீட்ல யாராலயும் வேல செய்ய முடியாது. செம வேல வாங்கும், சம்பளம் கேட்டா இலேசுல குடுக்காது. அபார்டுமண்டுல நெறய குடி வந்திருக்காங்க. ஏதாவது வீடு கெடைக்காம போகாது. மொதல்லியே கண்டிசனா சம்பளம் கேட்டுபோடணும். செல்வன் படிச்சு நல்ல வேலைக்கு வந்தா பின்னே யாரையும் லட்சியம் செய்யவேண்டாம். தல நிமிர்ந்து நடக்கலாம்” என்று மனக்கோட்டை கட்டியவாறு தான் வேலை செய்யும் இரண்டாம் வீட்டிற்கு நடந்தாள்.
“வள்ளியம்மா!
வள்ளியம்மா!”
வள்ளி திரும்பி
பார்த்தாள்.
ராமக்காளின் பெண்
செல்லி – வயது எட்டு – ஓடி வந்தாள்.
ஓடி வந்த வேகத்தில்
மூச்சு வாங்க,
வள்ளியம்மா!” .........
செல்வன் .. இஸ்கோலுக்கு போகல்ல...வெளையாடிட்டிருக்கான். கிரிக்கட்டு.” என்று
செய்தி தெரிவித்தாள். தன்னை விளையாட்டிற்கு சேர்த்துக் கொள்ளவில்லை என்ற கோபம்
அவளுக்கு.
வள்ளியின் முகம்
மாறியது. கோபத்தில் இறுகிய முகத்துடன் சேரிக்குத் திரும்பினாள். விடுவிடு என்று
வேகமாக நடந்த அவளை செல்லி திருப்தியும் பயமும் கலந்த பார்வையுடன் பின் தொடர்ந்து
ஓடினாள்.
No comments:
Post a Comment